பா . சக்திவேல்

Name

Email *

Message *

Saturday, 9 January 2016

பொங்கல் பரிசு

தமிழக அரசு நம் மக்களின் அடையாளமாக  கொண்டாடப்படும் தை திருநாளின் வருகையை வரவேற்க நூறு ரூபாயும் , அரிசியும், இரண்டு அடி  கரும்பு துண்டுகளையும் வழங்கியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது .ஆனால் தன்  மானத்தையும் , உழைப்பின் வெகுமதியையும் உணர்த்தும் முகமாக அறியப்படும் பொங்கல் விழாவினை தன் சொந்த உழைப்பால் ஈட்டப்பட்ட ஊதியத்தால் கொண்டாடப்படாமல்  இன்னும்  இலவசம் வாங்கி தான் கொண்டாடப்பட வேண்டிய அளவிற்கு இருக்கின்ற  மக்களின் இயலாமையை , அவர்களின் இந்த நிலைக்கு பின்னணயில் இருக்கும் அரசியல் தந்திரத்தையும் நினைக்கும் போது மிகுந்த வருத்தமாக உள்ளது . நான் எந்த அரசியல் அமைப்பையும் சார்ந்தவன் அல்ல என்பதனால் பொது மக்களில் ஒருவனாகவே  இதை காண்கிறேன் .
உண்மையில் பொங்கல் பரிசாக மக்கள் எவ்வளவோ எதிர் பார்த்து கொண்டிருக்கிறார்கள் .
1. இளைஞர்களுக்கு  வேலை வாய்ப்பை வெறும் அறிவிப்பாக இல்லாமல் நிஜமான  பலன் கிடைக்கும் தொழில் ஆதாரமாக ,
2. நசித்து வரும் சிறு தொழில்களை காக்க , நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை  உலக தரத்திற்கு  கொண்டு செல்லும் தொழில் நுட்ப உதவியாக ,
3.வெறிச்சோடி கிடக்கும் விவசாயத்திற்கு  தன்னம்பிக்கை அளிக்க , உற்பத்தியாகும் பொருள்களை வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய , நீராதாரங்களை காக்க ,
4. பல லட்ச கல்வி கட்டணங்களை வசூலித்து கல்வி கண் திறக்கும் கல்வி வள்ளல்களிடமிருந்து மாணவர்களையும் , பெற்றோர்களையும் காத்து அரசின் நேரடி உதவி - உதவி தொகையாக இல்லாமல் , தரமான கல்வி நிலையங்களாக நிலை பெற ,
5. ஒரு  நாளைக்கு சராசரியாக 200 ரூபாய்க்கு குடிக்கும் தமிழக மக்களை காத்து அவர்களின் குடும்ப பொருளாதாரத்தை பேணி , கடன் தொல்லைகளில் இருந்து மீண்டு சேமமுரச் செய்ய ,
6. லட்ச  கணக்கில் மருத்துவ கட்டணம் வசூல் செய்யும் வசூல் ராஜா மருத்துவ மையங்களில் இருந்து மக்களை மீட்டு , தரமான மருத்துவ சிகிச்சை நவீன மருத்துவ உபகரணங்களுடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிடைக்க செய்ய ,
இன்னும் எத்தனையோ நல திட்டங்களை  எதிர் பார்த்து மக்கள் காத்திருகின்றனர் . இவைகளில் எவையெல்லாம் நடை பெறுகிறதோ  அன்று  உண்மையில் பொங்கல் கன்னல் சாராய் இனிக்கும் .

2 comments:

  1. அன்பு நண்பர் முனைவர் திரு பா.சக்திவேல் அவர்களுக்கு வணக்கம். வலையுலகிற்கு அன்புடன் வரவேற்கிறேன். தங்கள் தமிழார்வமும், கணினி அறிவும் தங்களை உயர்த்துவதோடு, தமிழ்ச்சமூக உயர்வுக்கும் உதவுமென்று நம்புகிறேன். தொடர்வோர் பட்டி உள்ளிட்ட பிற இணைப்புகளைத் தாருங்கள். தொடர்பிலுள்ள நண்பர்களுக்கு மின்னஞ்சல் வழி உங்கள் வலை வரவை அறிமுகப்படுத்தி அழையுங்கள். பிற வலைப்பக்கங்களிலும் சென்று பின்தொடர்ந்து, நட்பை வளர்த்து வலையுலக எழுத்தாளராய் வளர்க, வளர்க்க,வாழ்த்துகள்.

    ReplyDelete