பா. சக்திவேல்

Name

Email *

Message *

Wednesday 2 January 2019

Monkey's p(b)ath

ஒரு குரங்கின் மனதின் குரல் அறியா உயிர் கூட்டம் இருந்தென்ன?


சமீபத்தில் தமிழகத்தில் நுழைத்த கஜா புயலின் கோரப் பிடியில் சிக்கி துயருற்ற மக்களுக்காக பல்லாயிரக் கணக்கான தன்னார்வலர்கள் தானாக முன் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

குருவி உள்ளிட்ட பறவைகளும், குரங்கு உள்ளிட்ட ஜீவன்களும் சந்தித்த இழப்பு மிகக் கொடுமையானது.

காய், கனிகளையும் பிஞ்சுகளையும் ருசி பார்க்கும் குரங்கினங்கள் புயலின் விசமத்தால் விசனத்தோடு விம்மி அழுகின்றது.

தானாக ஏதுவும் கிடைக்காத நிலையில் நாமாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்து அவ்வப்போது சிலர் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து பசியாற்றிக் கொள்கிறது.

அப்படி நுழையலாம் என காத்திருந்த போது அங்கே சமையலறையிலிருந்து ரவா பாத் (கிச்சடி) சமைக்கும் வாசம் நாசியை குசியேற்றியது. அதை சுவைக்க நினைத்த குரங்கு மனதின் குரலை அறிவார் யார்? அடித்து விரட்டவே முயல்கின்றனர்....