பா. சக்திவேல்

Name

Email *

Message *

Tuesday 1 August 2017

எப்படித் தீர்ப்பது ?




மீன் பிடிக்க விரித்த வலையில் நத்தைகள் மாட்டிக் கொள்கின்றன.

எலிக்கு வைத்த  மின்வேலியில் சிக்கி  யானைகள் இறந்து  போகின்றன ..

லஞ்சம் வாங்குவோரை பிடிக்க சிறப்பு சட்டம் , சிறப்பு காவலர் , சிறப்பு நீதி மன்றம் என எல்லாம் இருந்தும் ஒரு அலுவலகத்தில் லஞ்சமே வாங்க மாட்டேன் என்று வைராக்கியமாய் இருப்பவரை லஞ்சம் பெறும் அத்தனை ஊழியர்களும் சேர்ந்து அவருக்கு தெரியாமல் சூழ்ச்சி செய்து லஞ்ச ஊழல் புகாரில் சிறப்பாக சிக்க வைக்கின்றனர் ......



ஏழைகளுக்கு இலவசம் , உதவிகள் என்று சொன்னால் சுயமாக நிற்கும் தெம்பு இருப்போரும், நாங்களும் ஏழைகள் தான்  என்று இறங்கி வந்து வரிசையில் நிற்கின்றனர் .......

வருமானத்தை வைத்து வரம்புகளை வகுத்தாலும் அதிகாரியை அரவணைத்து குறைத்து காட்டி குனிந்து கொள்கின்றனர் ....

நான்கு சக்கர வாகனம் வைத்திருப்போருக்கு உதவி இல்லை என்ற உடன்  நான்கு நான்கு சக்கர வாகனங்களின் மொத்த மதிப்பில் ஒருவர் வாங்கி வைத்திருக்கும் அயல் நாட்டு இரண்டு சக்கர வாகன வைத்திருப்பவரை காட்டி , இவர் என்ன குறைந்தவரா என கேட்கின்றனர் ......

மூன்று அறைகள் இருக்கும் வீடு வைத்திருந்தால் எதுவும் இல்லை என்றால் , மூன்று அரை கண்டிப்பாக எல்லோருடைய வீட்டிலும் இருக்கும் என்கின்றனர் .... அதுதான் சமையலறை , படுக்கை அறை , கழிவறை  இது போக சிலரிடம் பூஜையறை ..... இவர்களை என்ன செய்ய போகிறீர்கள் ......

விலை வாசிகளை அலை பேசிகளின் மாதிரி போல வெகுவாக உயர்த்துறீர்கள் ... ஆண்டுக்கு ஒரு லட்சம் வருமானம் வாங்கினால் என பெரிய மிச்சமா   என சிலர் அங்கலாய்க்கின்றனர்......

வருமான வரி கட்டினால் உதவிகள் இல்லை .... வரியே  கட்டாமல் கல்வி , மருத்துவ  கொள்ளைக்கு என்ன செய்ய போகிறீர்கள் ? கோடியில் தொழில் செய்து நஷ்ட கணக்கு காட்டுவோரெல்லாம் எப்படி கண்டுபிடிப்பீர்கள் என்று சிலர் கேள்வி .............

குளிர் சாதன வசதி இருந்தால் இலவசங்கள் இல்லை என்றால் ஏழைகள் இனி அவ்வசதியை பெறுவதற்கு அஞ்சுவர் . உங்கள் திட்டம் அவர்களின் வளர்ச்சியை தலையில் தட்டும் ....

5 ஏக்கர் நிலம் இருக்கிறது , விவசாயம் செய்ய நீரின்றி எப்படி சாகுபடி செய்வது ? இதையெல்லாம் யோசிக்க வேண்டாமா ? ஊருக்கு  சோறிடும் உழவன் வரிசையில் நின்று இலவச அரிசி வாங்கும் படி செய்தது யார் ? விவசாய மேம்பாட்டிற்கு , அவர்களின் விளைச்சல் பொருள்களை சர்வதேச தரத்தில்  சந்தை படுத்துவதற்கு  என்னென்ன முயற்சிகளை அரசாங்கம் எடுத்துள்ளது ? உற்பத்தி பொருள்களை சேமித்து உரிய விலைக்கு விற்பனை செய்ய என்னென்ன முயற்சிகள் எடுத்துள்ளது ? கேள்விகள்  நீளும்....


சமையல் எரிவாயுவிற்கு அனைவரையும் மாற வைத்து மானியம் அளித்து  பின்பு பின் வாங்கியது கார்பொரேட் முதலாளிகளின் வணிக யுக்தி .... பலி கடா ஆனது மக்கள் , பலி வாங்கியது அரசியல் பூசாரிகள் .......

உண்மையில் இலவசம் , சலுகை என்றால் இருந்தவருக்கு ஒரு ஏக்கம் வரத்தான் செய்கிறது ....
பல நூறு பட்டு வேட்டிகளும் புடவைகளும் அலமாரியில் உறங்குகின்ற போதும் சிலர்க்கு அரசாங்கம் கொடுக்கின்ற நார் துணிகளை விட்டு கொடுக்க மனம் இல்லை .......

பள்ளத்தில் விரைந்த வெள்ளத்தில் சிக்கி மடிந்த மனிதர்களுக்கு நிவாரணம் அளித்தால் உள்ளத்தில் வருந்தி உள்ளதில் சிறந்த இல்லம் வைத்திருப்போரும் கையேந்தும் கீழ் நிலை தொடர்கிறது .....  

5 comments:

  1. நல்ல அலசல் நண்பரே அருமை - கில்லர்ஜி

    ReplyDelete
  2. அப்படியே பழகிப்போய்விட்டோம். முதலில் நம்மை நாம் திருத்திக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  3. எந்த ஒரு திட்டத்திலும் ஒரு பத்து முதல் பதினைந்து சதவிகிதம் இது போல நடக்கும் .அரசு அளிக்கும் ஐ ஆர் டி பி ,மானியங்கள் சிறு தொழில் மானியம் இவற்றிலெல்லாம் இது சகஜம்

    ReplyDelete