கட்டுரை : பா.சக்திவேல்
இணைய தளம், பல பேர் இணையும் தளமாகவும், இணைக்கும் தளமாகவும் மாற்றம் பெற்று இருப்பது தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சிதான்.
பாரதத்தின் அரசியல் கட்சிகள் மக்களின் சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதோடு இலக்கியம், விவசாயம், சட்டம், கலை, ஊடகம் என பல குழுக்களை நிறுவி அதன் மூலம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தது.
ஆனால் அத்தனை அணிகளையும் பின்னுக்கு தள்ளி, சமூக ஊடகங்களில் உலா வருகின்ற, facebook , whatsapp , twitter போன்ற பயன் பாடுகளை பக்குவமாக பயன்படுத்திக் கொள்ள மிகுந்த முனைப்புடன் தற்போது செயல் பட்டு வருகின்றது.
இணைய தள அணி , facebook அணி , whatsapp அணி , twitter அணி என்ற பல்வேறு குழுக்கள் உருவாக்கப் பட்டு, தங்கள் கட்சிகளின் புகழ் பாடுவதையும், மற்றவர்களின் குறைகளை விமர்சனம் செய்யவும் செயல் பட்டு வருகின்றது.
உண்மைகளை ஊரறிய சொல்வதில் தவறில்லை. போலி செய்திகளை ஆதார படுத்த, ஆவணம் ஆக்க ஆணவத்தோடு செயல்படுவது தான் இளைஞர்களின் நம்பகத்தன்மையை நாசம் செய்து நிர்மூலமாக்குகிறது.
நீங்கள் இவ்வளவு படித்தது பொய்யுரை பரப்பாவா? வதந்திகளை வழங்கவா? உங்கள் கற்பனை திறனும், ஆக்க சக்தியும், மக்களை குழப்புவதற்காகவா?
போலிகளை வீசினால், நாளைக்கு நீங்கள் எது சொன்னாலும் கேலியும் கிண்டலுமாக போய்விடுமே தவிர உங்கள் சிந்தனையும் , கருத்தும் கவனம் பெறாது. உங்களின் மகத்துவத்தை நீங்களே கெடுத்து கொள்வதுதான் ஆனந்தமா?
நான்காம் தமிழ் சங்கம் வளர்த்த பாண்டித்துரை தேவர், திருக்குறளை பிழையாக அச்சிட்டு ஒருவர் வெளியிட்டார் என்பதறிந்து , அத்தனை நூல்களையும் தாமே பொருள் செலவு செய்து வாங்கி தீயிட்டு அழித்தார் என்பது வரலாறு. அது மாதிரி நல்லெண்ணம் கொண்டவர்கள் தற்காலத்தில் மிக அரிது. ஆகவே
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
மணக்குடவர் உரை:
யாதொரு பொருளை யாவர் சிலர் சொல்லக் கேட்பினும் அப்பொருளினது உண்மையை யாராய்வது அறிவாவது. இது யாவர் சிலர் நட்டோராயினும் பகைவராயினும் அவர் கூறக் கேட்டவற்றில் தெள்ளியராய் ஆராய்ந்து துணித லறிவென்றது.

பரிமேலழகர் உரை:
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவு. (குணங்கள் மூன்றும் மாறி மாறி வருதல் யாவர்க்கும் உண்மையின், உயர்ந்த பொருள் இழிந்தார் வாயினும், இழிந்த பொருள் உயர்ந்தார் வாயினும், உறுதிப்பொருள் பகைவர்வாயினும், கெடுபொருள் நட்டார்வாயினும், ஒரோவழிக் கேட்கப்படுதலான், 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்' என்றார். அடுக்கு, பன்மைபற்றி வந்தது. 'வாய்' என்பது அவர் அப்பொருளின்கண் பயிலாமை உணர்த்திநின்றது. மெய்யாதல் , நிலைபெறுதல். சொல்வாரது இயல்பு நோக்காது, அப்பொருளின் பயன் நோக்கிக் கொள்ளுதல் ஒழிதல் செய்வது அறிவு என்பதாம்.).

ஐயன் திருவள்ளுவரின் அறிவுறுத்தலுக்கேற்ப செயலாற்றுவது மேன்மை பயக்கும்.
memes உருவாக்குபவர்கள் தமிழைக் கொல்வது போல, வேற்று எம்மொழியினரும் தமிழில் பிழை செய்து இருக்க மாட்டார்கள்.
மொழி ஒரு தனி அடையாளம், அதை சிதிலம் அடைய செய்வது அவமானம். அதை உண்மை கூற பயன் படுத்துவதுதான் அறிவார்ந்தோர் ஆற்றும் செயல்.
No comments:
Post a Comment