பா. சக்திவேல்

Name

Email *

Message *

Wednesday, 28 December 2016

அச்சுறுத்தலும் மிச்சமிருத்தலும்

இயற்கை மாபெரும் உணவுச்  சங்கிலியை உருவாக்கி  ஒவ்வொரு உயிருக்கும் உணவாக்கி வைத்திருப்பது அற்புதத்திலும் அதி அற்புதம் . இதில் ஒரு   லட்சத்து  எழுபத்து மூன்றாயிரம் யோனி  பேதங்களுடன் பல கோடி உயிர்கள் பல்வேறு சிறப்புத் தனித்தன்மைகளுடன் வாழ்ந்து வருகின்றன.  இவற்றில் ஒரு உயிரியாக மனிதனும் உருவாகியிருக்கிறான் . 


நாளடைவில் மனிதன் மட்டும் சில தந்திர யுக்திகளாலும் நீண்ட அனுபவங்களின் நினைவு திறன் மேம்பாட்டினாலும் அதிக அளவில் மற்ற உயிர்களின்  சுதந்திரத்திலும் நிம்மதியிலும் கை  வைக்க  ஆரம்பித்தான் . உணவுக்காக பறவை , விலங்கு  வேட்டையை  துவங்கியவன்  நிலையான உணவனுக்காக விவசாயம் செய்கிறேன் என்று சொல்லி காடுகளை அளித்து உணவுச்சங்கிலியில்   அடித்தட்டு  உற்பத்தியாளர்களாக இருந்த  மரம்  செடிகளை ஒடுக்கி  காடுகளை  சுருக்கி  விலை நிலத்தை பெருக்க முனைந்தான். வணிக  நடவடிக்கையாலும் தன்  அடாவடித்தனத்தை மற்ற  உயிர்களின் மீது  அவிழ்த்து  விட்டான் . 
இதை பார்த்து தான் வள்ளுவர் 

" பகுத்துண்டு  பல்லுயிர் ஓம்புதல்  நூலோர் 
  தொகுத்தவற்றுள் எல்லாம் தலை "
என்று  தாம்  இதுவரை ஆய்ந்த  பல்லாயிரம்  நூல்களில்  இதுவே  முதன்மையானதாக சொல்லப்பட்டுள்ளது)  என  உலகிலேயே " பல்லுயிர் தன்மை " (Biodiversity ) குறித்து  முதன் முதலில் பேசினார்.
அடுத்ததாக  நமக்கு முந்தைய தலைமுறையில்  வந்த  பாரதி  " காக்கை குருவி எங்கள் சாதி" என்று  வழி மொழிந்தான் . ஆனால்  இன்று மனிதனின் அதீத ஆசையினாலும்  கட்டுப்பாடற்ற ஆக்கிரமிப்பினாலும்  இமாலய மலை சாரலிலும்  மேற்கு  தொடர்ச்சி மலையினிலும் பல அபூர்வ வகை உயிரினங்கள் ( உலகில் வேறெங்கிலும் இல்லாத) அழிந்து வருவதாக உலகில் அழிந்து வரும் உரினங்களின் பதிவு ஏட்டில்  (red data book) குறிப்பிடப்பட்டுள்ளது.
மனிதனின் அத்து  மீறலால் வாழ வழியின்றி  மீண்டும்  அதனுடைய  பூர்வீக இருப்பிடத்தை தேடி  விலங்குகள்  வருவதால்  மனித-விலங்கு  மோதல்கள்  அங்கங்கே  அதிகமாகி விட்டது . இதற்கு காரணம் மனிதனின்  அசுர  வளர்ச்சியும்  சகிப்புத்தன்மை குறைபாடும்  வியாபார குறுக்கு புத்தியும் ஆகும் . இவற்றிலிருந்து  ஏனைய உயிர்கள் தப்பித்து  எத்தனை  காலம்  வாழப் போகின்றதோ ? அவைகளுக்கும்  கொஞ்சம் இடம்  கொடுப்போம் .  
                                   







4 comments:

  1. மனித விலங்கு மோதல் என்பதானது தற்போது அதிகரித்துவிட்டது. அந்த நிலையிலும் நாம் அதிகம் தவறு செய்ய ஆரம்பித்துவிட்டோம் என்பது வேதனையே.

    ReplyDelete
  2. மனிதனுள் விளங்கும் தன்மை விலங்குத் தன்மையாக மாறுவதால் தான் விபரீதம். தங்கள் கருத்திற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  3. ஐந்தறிவு ஜீவன்களுக்கு ஆறறிவு மனிதன்தான் வில்லனாகி விட்டானே !அனுபவித்துத்தான் ஆகணும் :)

    ReplyDelete
  4. அருமை. 5 அறிவுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்க்கும்

    ReplyDelete