மாரடைப்பு மார்க்கம்
மாரடைப்பு மந்திரம் பல குற்றவாளிகளின் தந்திரங்களில் முக்கிய ஒன்றாக
பல திரை இலக்கியங்களில் சாட்சியாக காட்டப்பட்டுள்ளது ...
நான் யாரையும் குறிப்பிட்டு சொல்ல முயற்சிக்கவில்லை ..
ஆனால் சமீபத்திய தமிழக நிகழ்வுகள் மக்களை கால ஓட்ட கணக்காளர்களாக
மாற்றிச் செல்கிறது ..
நினைத்த நேரத்தில் அவசர ஊர்தியையும் , மருத்துவரையும் வரவழைப்பது சாத்தியம் எனில் மாரடைப்பை உடலுக்குள் கொண்டு வருவதும் எளிது தானோ ?
எனக்கு தெரியவில்லை அறிந்தவர்கள் சொல்லுங்கள் .
"திருடனுக்கு தேள் கொட்டியது போல " என சொலவடை உள்ளது .
தேள் உருவில் வந்தது யார் ? நீதி தேவனா ?
நீதி தேவன் வேற்று உருவில் வருவதாயின் இப்போது உள்ள நவீன திருடர்களுக்கு சாதரண நச்சு கொண்ட தேளின் கொடுமை போதுமானதுதானா ?
சுனாமிகள் இந்த நாட்டின் வளத்தை சுரண்டி சென்றதை விட பினாமிகள் எல்லோரையும் வறண்டி சேர்த்ததுதானே அதிகமாக தெரிகிறது ...
உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு வியர்வை சிந்துபவர்கள் எல்லோரும் ஏமாளிகளா ? ஏதும் அறிந்திராத கோமாளிகளா ? அல்லது வாழ்க்கையை வாழத் தெரியாத சாமர்த்தியமற்றவர்களா ?
கொடுங்கோலர்கள் மக்களை வதைத்ததை விட, இந்த நீண்ட கையர்கள் மக்களிடம் அதிகம் கறக்கின்றனரே !
இதையெல்லாம் இந்த நாடும் , மக்களும் எப்படி சகிக்க போகிறார்கள் ...
வெண்மையை கண்டிறாதவர்கள் பழுப்பையும் வெண்மையென்று புகழ்வார்களே !
என்னாட்டு இளைஞர்கள் ஒன்று தனக்கு பிடித்த நாயகர் இவர் தான் என சண்டையிடுகின்றனர் , இல்லை பொழுதை வீணே கழிக்க நினைக்கின்றனர் .
இந்த மாரடைப்பு மந்திரவாதிகளுக்கு உண்மையில் மரண அடைப்பு கொடுக்கப்போவது எப்போது ?
குஜராத்திலும் வட நாட்டிலும் இது போல நடவடிக்கைகள் தொடர்ந்தால் தானே தென்நாட்டு மக்கள் இன்னும் நிறைய மருத்துவ சிகிச்சை நாடகங்களை காண முடியும் ... ஆமாம் பல இல்லங்களில் சுவாரசியம் இல்லாத நாடகத் தொடர்களை பார்க்கும் பலர், இனி சமீபத்திய செய்திகளை காணத் தொடங்குவர் ...
No comments:
Post a Comment